நேற்றைய தினம் கொவிட் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்!
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 545 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24,532 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனையோர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 294 பேரும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 130 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20,983 ஆக அதிகரித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 257 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,817 ஆக உயர்வடைந்துள்ளது.
படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 58 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,593 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.