கொவிட் இரண்டாவது அலையால் 45 நாட்களில் எதிர்கொண்ட பேரிழப்பு

கொவிட் இரண்டாவது அலையால் 45 நாட்களில் எதிர்கொண்ட பேரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தனியார் பேருந்துகள் 45 நாட்களில் சுமார் 2 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன சிங்கள இணையத்தளமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 50,000 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாகவும் அவர் கவலையடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தினமும் சுமார் 20,000 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, இந்த நிலைமை அந்த பேருந்துகளின் வருவாயை பாதித்துள்ளது.

இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், பயணிகள் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலைமை தொடர்ந்தால், பஸ் தொழில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என்று அவர் கூறினார்.