நேற்றைய தினம் மாத்திரம் 545 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
நாட்டில் நேற்றைய தினம் 545 கொவிட்19 நோய்த் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 4 பேரை தவிர ஏனைய அனைவரும் ஏற்கனவே கொவிட்-19 நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி பேலியகொடை மினுவாங்கொடை இரட்டை கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20,983 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் இலங்கையில் இதுவரையில் 24,532 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தற்போது கொவிட்19 நோய்த்தொற்றுக்கு உள்ளான 6,593 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொவிட் 19 நோயில் இருந்து மேலும் 257 பேர் நேற்று குணமடைந்தனர்.
இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் 17,817 பேர் இதுவரையில் அந்த நோயில் இருந்து குணமடைந்திருக்கின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 43 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்;.
அவர்களில் 4 பேர் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகுட்பட்ட பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும் ஆலையடிவேம்பில் ஒருவரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 92 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 11 பேருக்கும் கல்முனை பிராந்தியத்தில் 138 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் இதுவரை 257 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.