
மஹர சிறை மோதல் சம்பவம்- CIDயின் 12 அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று நியமனம்
மஹர சிறை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹர சிறையில் கடந்த தினம் இடம்பெற்ற பதற்ற நிலைமையால் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 104 பேர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நீதியமைச்சினாலும் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹர சிறைச்சாலை பதட்ட நிலை தொடர்பான விசாரணைக்காக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண விலகியதை அடுத்து, அந்த இடத்துக்கு காவற்துறை அத்தியட்சகர் லலிந்த ரணவீர நியமிக்கப்பட்டுள்ளார்.