2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைக்கேடு- விவசாய அமைச்சின் அதிரடி நடவடிக்கை

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைக்கேடு- விவசாய அமைச்சின் அதிரடி நடவடிக்கை

தேசிய உரக்கூட்டுத்தாபனத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு தொடர்பாக மேலும் சிலர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த கூட்டுத்தாபனத்தின் 3 உதவி பணிப்பாளர்களும்,2 முகாமைத்துவ அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.