இலங்கையில் இளைஞர்களிடையே பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய்
இலங்கையில் சுமார் 3600 எயிட்ஸ் நோயாளர்கள் இருக்கக்கூடும் என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்ஜலி ஹெட்டிஆராய்ச்சி தெரிவிக்கின்றார்.
நாட்டிலுள்ள இளைய சமூகம் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் அளவு தற்போது அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் 2304 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 1845 பேர் தமது சிகிச்சை நிலையங்களின் ஊடாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 12 வீதமானோர் இளைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும் சுமார் 3600 எயிட்ஸ் நோயாளர்கள் இருக்கக்கூடும் என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை இளைய சமூகத்திற்கு மத்தியில் எயிட்ஸ் பரவியுள்ளமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்