
கொழும்பு துறைமுகத்தின் மற்றுமொரு கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தில் ஜய கொள்கலன் முனையத்தின் ஐந்தாம் கட்ட கட்டுமானப் பணிகள் இன்று (1) ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டத்திற்காக 32 மில்லியன் டொலர் செலவழிக்கப்படவுள்ளதோடு 2022ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது கட்டத்தின் கீழ் மேலதிகமாக 120 மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதோடு, இதனூடாக 366 மீட்டர் நீளமுள்ள கப்பல்களுக்கு ஜெயா கொள்கலன் முனையத்தில் நங்கூரமிட முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் வழிகாட்டுதலின் கீழ் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.