இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் இன்று மேலும் 268 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொவிட்19 நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 24,255 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, கொவிட் 19 நோயில் இருந்து மேலும் 257 பேர் குணமடைந்தனர்.

இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் 17,817 பேர் இதுவரையில் அந்த நோயில் இருந்து குணமடைந்திருக்கின்றனர்.

தற்போது கொவிட்19 நோய்த்தொற்றுக்கு உள்ளான 6,320 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று வரையில் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 9,199 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

6,042 பேர் கம்பஹாவிலும், 1,024 பேர் களுத்துறையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் புத்தளம் மாவட்டத்தில் 147 பேரும், அனுராதபுரத்தில் 85 பேரும், கண்டியில் 375 பேரும், குருணாகலையில் 327 பேரும், பொலனறுவையில் 23 பேரும் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணததில் 26 பேரும், இரத்தினபுரியில் 151 பேரும், கேகாலையில் 207 பேரும், மொனராகலையில் 17 பேரும், கல்முனையில் 54 பேரும், மாத்தளையில் 41 பேரும், காலியில் 219 பேரும், அம்பாறையில் 30 பேரும், பதுளையில் 62 பேரும் மாத்தறையில் 50 பேரும் கொவிட்19 தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பில் 81 பேரும், ஹம்பாந்தொட்டையில் 24 பேரும், வவுனியாவில் 15 பேரும், நுவரெலியாவில் 129 பேரும், கிளிநொச்சியில் 11 பேரும், மன்னாரில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் மாத்திரம் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வானங்கள் நிறுத்தப்பட், பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 67 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று பெறப்பட்டுள்ள பிசிஆர் மாதிரிகள், கிளிநொச்சி கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தி நாளை அறிக்கை வெளியாகும்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,010 குடும்பங்களைச் சேர்ந்த 2,220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இதேவேளை, அக்கறைப்பற்றில் 91 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கில் கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வடைந்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொகவந்தலாவயில் இன்று கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவரின் மகன் கல்வி பயின்ற பாடசாலை ஒன்றின் தரம் எட்டு வகுப்பு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுறுதியானவரின் மகன் மற்றும் மேலும் சில மாணவர், ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

பொகவந்தலாவ குயினா கிழ்பிரிவில் இன்று மேலும் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவயில் குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒருவருக்கு தொற்றுறதியானமையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 34, 75, 64, 13 மற்றும் 9 வயதுகளை உடைய 5 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன் அதேதோட்டத்தில் முன்னர் இனங்கானப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய 41 வயதான வர்த்தகர் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது