மஹர சிறையிலிருந்து உளநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 21,000 மாத்திரைகள் மீட்பு!

மஹர சிறையிலிருந்து உளநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 21,000 மாத்திரைகள் மீட்பு!

உளநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 21000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பின்னரே கைதிகள் வன்முறையில் தீவிரமாக ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவியல் பாதிப்புகள் குறித்த சிகிச்சைகளிற்கான மருந்துகள் பெருமளவில் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது ஏன்? கைதிகளுக்கு வழங்குவதற்காக 21, 000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 26 பேரே துப்பாக்கி காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏனையவர்களுக்கு வெட்டு காயங்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் தங்களுக்குள்ளே மோதியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.