மஹர சிறைக் களேபரம்: நீதி அமைச்சர் நியமித்த குழுவிலிருந்து விலகினார் பிரதி பொலிஸ்மா அதிபர்

மஹர சிறைக் களேபரம்: நீதி அமைச்சர் நியமித்த குழுவிலிருந்து விலகினார் பிரதி பொலிஸ்மா அதிபர்

மஹர சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதித்துறை அமைச்சர் மொஹமட் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண விலகியுள்ளார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நீதியமைச்சர் நேற்று நியமித்தார்.

இந் நிலையில் குறித்த விசாரணை குழுவில் இருந்து விலகியுள்ள அஜித் ரோஹன, தனது முடிவினை எழுத்துப்பூர்வமாக நீதியமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளராக அவர் செயல்படுவதாகவும், சிறைச்சாலை பிரச்சினை உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்து வழக்கமான ஊடக விளக்கங்களை நடத்துவதாகவும் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தனக்கு பதிலாக மற்றொரு அதிகாரியை நியமிப்பது நீதி அமைச்சருக்கு பொருத்தமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.