80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் - எச்சரிக்கை..!

80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் - எச்சரிக்கை..!

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது.

இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு மற்றும் பருத்திதுறைக்கு அருகில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு பிரவேசிக்கும்

இதன் காரணமாக நாளை மறுதினம் வரையில் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.