மலையகத்தில் இரண்டாவது கொவிட் மரணம்...!

மலையகத்தில் இரண்டாவது கொவிட் மரணம்...!

நாட்டில் நேற்றைய தினம் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலஹா பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் , நீரிழிவு, மற்றும் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொவிட்-19 மரணமாக இது கருதப்படுகிறது.

முன்னதாக கினிகத்ஹேன பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தார்

அதேநேரம், அட்டுலுகம பகுதியை சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் ,நோய் கொவிட் 19 தொற்று தீவிரமடைந்தமை, நீரிழிவு மற்றும் கொலஸ்ரோல் அதிகரித்தமை என்பனவாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.