பொகவந்தலாவையில் மேலும் 6 பேருக்கு கொரோனா...!

பொகவந்தலாவையில் மேலும் 6 பேருக்கு கொரோனா...!

பொகவந்தலாவ குயினா கிழ்பிரிவில் மேலும் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவயில் குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒருவருக்கு தொற்றுறதியானமையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 34, 75, 64, 13 மற்றும் 9 வயதுகளை உடைய 5 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன் அதேதோட்டத்தில் முன்னர் இனங்கானப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய 41 வயதான ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, வடகொழும்பு பகுதியில் உள்ளவர்களுக்கே நாளாந்தம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதியாவதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கார்த்திகேசு ஸ்ரீபிரதாபன் தெரிவித்தார்.