23,987 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி..!
நாட்டில் இதுவரையில் 23,987 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் திவுலுப்பிட்டி மற்றும் பேலியகொடை இரட்டைக் கொவிட் கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 558 பேர் நேற்று குணமடைந்தனர்.
இதன்படி இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் 6 ஆயிரத்து 309 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது