சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம்

அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமையே இதற்கு காரணம் என அரசாங்கம் கூறியுள்ளது.

பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அடங்கிய அணியினர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே பல சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் காணப்படுகிறது. மஹர சிறைச்சாலையில் மாத்திரம் இந்த நிலைமை கூடியளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் 800 கைதிகளை தடுத்து வைப்பதற்கான வசதிகள் மாத்திரமே இருக்கின்றன. எனினும் அந்த சிறையில் 3 ஆயிரத்து 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் இடையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக பெரிய பாதிப்பு ஏற்பட இதுவும் காரணம் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.