எயிட்ஸுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்

எயிட்ஸுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்

கொவிட்-19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அது தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சர்வதேச எயிட்ஸ் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1987ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ் தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் ஆகிய இருவருக்கு தோன்றிய யோசனைக்கு அமைக்கு சர்வதேச எயிட்ஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 1988ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச எயிட்ஸ் தினம், எச்.ஐ.வி. தொற்று பரவலினால் ஏற்படும் எயிட்ஸ் தொற்றுநோய் தொடர்பில் விழிப்பூட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் சுகாதார அதிகாரிகளினால் எயிட்ஸ் தொடர்பான எண்ணக்கருக்களில் பேச்சுக்கள், மாநாடுகள், பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கையில் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

´எச்.ஐ.வி. தொற்றை முடிவுக்கு கொண்டு வருதல், எதிர்ப்பு திறன் மற்றும் தாக்கத்தை குறைத்தல்´ என்பதே 2020ஆம் ஆண்டின் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலகளாவிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் எயிட்ஸை இல்லாதொழிப்பதே நோக்கமாகும். அதற்கமைய 2025ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலிருந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தயார்ப்படுத்தல்களின் மூலம் எயிட்ஸை இல்லாதொழிக்க முடியாததுடன், அதற்கு தேவையான பலம் மனித சமூகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றேன். அது அனைத்து மனித சமூகத்தினரதும் பொறுப்பாகும். அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 37 மில்லியனை தாண்டியுள்ளது. ஆண்டுக்கு 1.7 மில்லியன் பேர் புதிதாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவதுடன், இலங்கையில் அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும்.

எது எவ்வாறாயினும் எயிட்ஸுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுடன், அது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எச்.ஐ.வி. தொற்றுடைய நபர்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படாதிருப்பதற்கும், அவர்களை தேவையான சிகிச்சைக்கு உட்படுமாறும் நாம் அறிவிக்க வேண்டும்.அதனால் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் தேவையான சிகிச்சைகளை முறையாக முன்னெடுத்து, நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எயிட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அனைவரும் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் விழிப்பூட்டலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்