
பிரதமரின் இளைய புதல்வருக்கு கொரோனா? உண்மை இதுதான் - கொடுப்பட்ட விளக்கம்
தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மகன் ரோஹித ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்க்ஷ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்து.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியில்,
நான் கொழும்பிலேயே இருக்கின்றேன் கண்டியில் தனிமைப்படுத்தப்படவில்லை. நானோ எனது குடும்பமோ கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் நானும் எனது குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலை முன்னெடுத்தோம்.
இதன்போது, பி.சி.ஆர் சோதனை செய்து கொண்டோம். பி.சி.ஆர் முடிவுகளில் நாங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.