மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு கடுமையான சேதம்

மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு கடுமையான சேதம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை இன்று பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தின் போது பெரும்பாலானவர்கள் சிறைச்சாலைக்குள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது வரையில் சிறைச்சாலையின் வளாகத்திற்குள் காவற்துறை விசேட அதிரடிப்படை வீரர்கள் 400 பேர் வரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.