நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் 7 பேர் பலி- காவற்துறை பேச்சாளர்

நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் 7 பேர் பலி- காவற்துறை பேச்சாளர்

இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்றைய நாளிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் மிகக் குறைந்தளவிலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த வாரம் ஆரம்பம் முதல் மீண்டும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.