அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுதியானவர்களில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் நிறுவகம், வெளிக்கந்தை, காத்தான்குடி, தெல்தெனிய ஆகிய ஆதார மருத்துவமனைகளில் இருந்தும், ஹம்பாந்தோட்டை மற்றும் ஹோமாகமை ஆகிய மருத்துவமனைகளில் இருந்து பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் வெளியேறியுள்ளனர்.
அதேநேரம், நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை நேற்று முதல் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றுறுதியான 441 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.