ஊரடங்கு நீக்கத்துடன் விபத்துகள் அதிகரிப்பு! மஹிந்த அமரவீர
வீதி விபத்துகள் மீண்டும் அதிகரித்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைக்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக, வீதி விபத்துகள் குறைந்து காணப்பட்டன.
இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வீதி விபத்துகளினால் 736 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் வீதி விபத்துகளினால் 1006 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கமைய இவ்வருடத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கமைய பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.