காவற்துறை கான்ஸ்டபிள் கொலை விவகாரம்- சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
குருநாகல் - கொபேய்கனை - ஹாத்தலவ பிரதசத்தில் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர், டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வாகன சாரதியை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
குருநாகல் - நிக்கவரட்டிய பகுதியில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனம் குளியாப்பிட்டியவில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குருநாகல் - கொபேய்கனை - ஹாத்தலவ பிரதசத்தில் தெதுருஓயவில் இடம்பெறும் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர், மணல் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.