ஊரடங்கு பகுதிகளுக்கு மீண்டும் 5,000 ரூபாய்
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபா கொடுப்பனவு மற்றும் உணவுப்பொதிகள் என்பன தொடர்ந்தும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதை நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் குறிப்பிட்ட இடங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.