விடுவிக்கப்படும் சிறைக் கைதிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த தீர்மானம்
பிணையில் செல்லும் அல்லது விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி பின்னர் வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
PCR பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் பல்லேகல மற்றும் வீரவில உள்ளக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக சிறைச்சாலை நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தற்போது, கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்படும் கைதிகளுக்காக மாத்திரம் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதுவரை வெலிக்கடை, கொழும்பு மெகசின், கொழும்பு விளக்கமறியல், மஹர, குருவிட்ட மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலைகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.