வடமாகாணத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் – கைத்தொழில் அமைச்சர்!
வட மாகாணத்தில் மூடப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமொன்றும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையானது வட மாகாணத்தில் காணப்படும் வேலை வாய்ப்பற்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையுமெனவும் அமைச்சர் விமர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.