இன்னும் 2 மாதங்களே - நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜோ பைடன்

இன்னும் 2 மாதங்களே - நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜோ பைடன்

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த நிலைளில், ஒரு வழியாக ட்ரம்ப், ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள ஜோ பைடன், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது.

ஏனெனில்ஆட்சி அதிகார மாற்றத்தில் வெள்ளை மாளிகையின் அணுகுமுறை மிகவும் நேர்மையாக உள்ளது.

இது ஒரு மெதுவான தொடக்கமாகும். இன்னும் 2 மாதங்களே உள்ளன. எனவே ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது என்றார்.