யாழில் இரகசிய தகவலால் சிக்கிய 22 வயது இளைஞன் ; அம்பலமான பின்னணி

யாழில் இரகசிய தகவலால் சிக்கிய 22 வயது இளைஞன் ; அம்பலமான பின்னணி

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இரகசிய தகவலால் சிக்கிய 22 வயது இளைஞன் ; அம்பலமான பின்னணி | 22 Year Old Youth Caught In Jaffna Due

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.