கொழும்பு 04, 08, 11 ஐ தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கொரோனா..!

கொழும்பு 04, 08, 11 ஐ தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கொரோனா..!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 502 கொவிட்19 நோயாளர்களுள், 262 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அவர்களில் கொழும்பு ஒன்றில் ஒருவரும், கொழும்பு 2 இல் 31 பேரும், கொழும்பு 3 இல் 6 பேரும், கொழும்பு 5 இல் 28 பேரும், கொழும்பு 6 இல் 23 பேரும், கொழும்பு 7 மற்றும் 9 இல் தலா இரண்டு பேரும், கொழும்பு 10 இல் ஐந்து பேரும், கொழும்பு 12 இல் 49 பேரும், கொழும்பு 13 இல் 19 பேரும், கொழும்பு 14 இல் 39 பேரும், கொழும்பு 15 இல் 42 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

அதேநேரத்தில் தெஹிவளையில் ஐந்து பேரும் மொரட்டுவையில் ஒருவரும், பன்னிப்பிட்டி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் தலா மூவரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 90 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 46 பேரும், புத்தளத்தில் 15 பேரும், நுவரெலியாவில் 8 பேரும் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நமுனுகுல கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் சிலருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் கொள்ளப்படவுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 102 பேருக்கு பி.சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்,

அந்த முடிவுகள் இன்று கிடைக்கப்பெறும் எனவும் பசறை பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் மரண வீடு ஒன்றுக்கும், பால் சேகரிக்கும் நிலையம் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அத்துடன் அவர் பயணித்த சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு பணியாற்றிய சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பசறை சுகாதார பரிசோதகர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் கிடைக்கப்பெறும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.