இந்த தசாப்தத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வழங்க தயாராகும் ஐசிசி

இந்த தசாப்தத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வழங்க தயாராகும் ஐசிசி

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பல்வேறு பிரிவுகளில் இந்த தசாப்தத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான பரிந்துறைகளில் இலங்கையின் 4 கிரிக்கட் வீரர்கள் அடங்குகின்றனர்.

இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, இந்த தசாப்பதத்தின் சிறந்த வீரர் விருதுக்கும், இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்கு, இந்தியாவின் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

இந்த தசாப்தத்தின் ஆத்மார்த்தமான வீரருக்கான விருதுக்காக இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் லசித்மாலிங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் ஆகியோரின் பெயர்களும் பந்துவீச்சாளர் பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.