வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு- இராணுவத் தளபதி

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு- இராணுவத் தளபதி

கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 326 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் கட்டாரில் இருந்து 180 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான 50 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குடும்பலநல விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குழந்தை பிரசவித்த பின்னர் தாயிடம் இருந்து குழந்தைக்கு வைரஸ் தொற்றுறுதியான சம்பவங்கள் எதுவும் இலங்கையில் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.