அனர்த்தங்களைக் கையாள இராணுவத்தில் புதிய படைப்பிரிவு

அனர்த்தங்களைக் கையாள இராணுவத்தில் புதிய படைப்பிரிவு

இலங்கை இராணுவத்தில் 58ஆவது படைப்பிரிவாக ‘அனர்த்த முகாமைத்துவத்துக்கான சிறப்புப் படைகள்’ என்ற புதிய இராணுவப் பிரிவு அண்மையில் நிறுவப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மண்சரிவு, வெள்ளம், நெருப்பு மற்றும் ஏனைய அவசர நிலைமைகளைக் கையாள்வதே இந்தப் பிரிவின் முக்கிய கடமையாகும்.

இந்தப் பிரிவினர் ஏற்கனவே பயிற்சிகளைத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இராணுவ காலாட் படைப்பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சி பெறுவர் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.