
பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா..!
பேருவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பேருவளை - பகுதியில் வசிக்கும் இருவருக்கு கொரோனா தொற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்கா நகரில் வசிக்கும் 83 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதிக்கான பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பரிசோதனைகளையடுத்து 38 பேருக்கான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன
இவர்களில் பேருவளை பிரதேச சபையின் உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.