நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!
நுவரலியா மாவட்டத்தில் இதுவரை 91 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பொது சுகாதார விசேட வைத்தியர் ஹிமேஸ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைய பகுதிக்கு பிரவேசிப்போருக்கு எல்பொட மற்றும் கலுகல ஆகிய பகுதிகளில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 31 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை 2 ஆயிரத்து 440 பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்
இதேவேளை, ஆராய்ச்சிகட்டு - கோட்டபிடிய பகுதியில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
52 வயதான குறித்த பெண் காய்ச்சல் காரணமாக சிலாபம் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொற்றுறுதியான பெண்ணின் குடும்பத்தினர் சகலரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் ஆராய்ச்சிகட்டு பிரதேசத்தில் 7 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எம்.சீ ஜயசிங்க தெரிவித்துள்ளார்.