கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள்..!

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள்..!

நாட்டில் நேற்றை தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 337 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 189 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களுள் புதுக்கடை பகுதியை சேர்ந்த 68 பேர் அடங்கியுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 47 பேருக்கும், நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 8 பேருக்கும், கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தலா 6 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.