தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மற்றுமோர் பகுதி..!
அங்குலானை காவல் துறை பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எனினும் ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அங்குலானை காவல் துறை பகுதி தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து இதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படாமையினால் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.