இரண்டு மில்லியன் மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

இரண்டு மில்லியன் மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

“160 தொகுதிகளில், 160 வீதிகள் அபிவிருத்தி “என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தலைமையில்  கப்புதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, “வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுதல்” என்ற வேலைத்திட்டமும், குறித்த பகுதியில் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இரண்டு மில்லியன் மரங்கள் நடப்படவுள்ளன.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.