டொனால்டு டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபரின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் (42), கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடி கியுலியானியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

 

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.