நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் (நவ.21, 1970)

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் (நவ.21, 1970)

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார். 1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார்.

சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். 

1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் (நவ.21) இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் இவரே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமஸ் எடிசன் அறிவித்தார்.
• 1920 - டப்ளினில் கால்பந்துப் போட்டி நிகழ்ச்சியில் பிரிட்டன் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
• 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
• 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
• 1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு, 650 பேர் காயமடைந்தனர்.
• 1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
• 2004 - டொமினிக்கா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், போர்ட்ஸ்மவுத் நகரில் கடுமையான சேதத்தை விளைவித்தது.