இணையத்தின் வாயிலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா!

இணையத்தின் வாயிலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா!

உலகளவில் ‘மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி‘ஆகிய பிரிவுகளின் கீழ், அரும்பெரும் பணிகளை ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்டம் என்கிற அமைப்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லி அடுத்த மாதம் 10ஆம் திகதி போஸ்லே நகருக்கு சென்று நேரில் நோபல் பரிசை வாங்க இருந்தார்.

எனினும்  கொரோனா தொற்று காரணமாக ஓஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெசும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.