நிவாரணம் மற்றும் கடன் அறவீட்டிற்கான கால வரையறை நீடிப்பு
இலங்கை மத்திய வங்கியின் மீள் நிதியிடல் வசதியின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் வசதியின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரணம் மற்றும் கடன் அறவீட்டை 2021 செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக 50 சதவீத திறைசேரி பிணையை, தொடர்புடைய வங்கிகளுக்கு வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தொழிற்றுறை நடவடிக்கைகளில் உள்ளுராட்சி நிறுவனங்களினால் அறவிடுகின்ற வரி மற்றும் கட்டணங்களை இலகுபடுத்தி அதிகபட்சத் தொகைக்கு உட்படுத்தி தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.