வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

யாழில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதி விபத்து மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்,

கடந்த கால விபத்துக்கள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் சிக்கிய 212 பேரும், ஏனைய விபத்துக்களில் 118 பேரும், தீ விபத்தில் 07 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 08 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையில் வீதி விபத்தில் சிக்கிய 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.