
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பாகங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.