மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறெனினும், நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் எவ்வித சுகாதார பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தினால் மீன் உட்கொள்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.

மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி நேற்றைய தினம் பச்சை மீனை செய்தியாளர் சந்திப்பில் வைத்து உட்கொண்டார்.

எனினும், இவ்வாறு பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் எனவும் நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் பிரச்சினை கிடையாது எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.