
திருகோணமலை-கோட்பே கடற்பகுதியில் வீழ்ந்து மீனவர் ஒருவர் பலி
திருகோணமலை- கோட்பே கடற்பகுதியில் விழுந்து தென்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் காலி - நில் வெல்ல, மஹருப்பவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்த கடந்த திங்கட் கிழமை அதிகாலை ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற நிலையில் காணாமல் போய்இருந்த 3மீனவர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டனர்.
வெருகல் ஆழ்கடல்பகுதியில் வைத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.