வரவு செலவுத் திட்டம் சிறப்பானது

வரவு செலவுத் திட்டம் சிறப்பானது

2021ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டமானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டதென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான இரண்டாம் வாசிப்பைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது உள்ளூர் வளங்களிலும், மனித மூலதனத்திலும் நம்பிக்கை வைத்து, தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறிமுறையைக் கொண்டதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.