நாடாளுமன்றம் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டு- பிரதமர்

நாடாளுமன்றம் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டு- பிரதமர்

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக நாடாளுமன்றம் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்த கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 5 வருடங்களில் நாடு பாரிய பின்னடை சந்தித்துள்ளது.

பின்னோக்கி சென்றுள்ள நாட்டை துரித கதியில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் சிரத்தை மேற்கொள்கிறார். இந்தநிலையில் அமையப்பெறவுள்ள நாடாளுமன்றம் பலம்பொருந்தியாக இருக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.