விமானப்பெறியியலாளர் என தெரிவித்து போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர்...!

விமானப்பெறியியலாளர் என தெரிவித்து போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர்...!

விமானப் பொறியியலாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு சட்டவிரோதமான முறையில் நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டவர் என தெரியவந்துள்ளது.

50 வயதுடைய இவர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபர் மூன்று திருமணங்கள் செய்துக்கொண்டுள்ளதோடு, அத்தியாவசிய சேவைகளுக்கான போலியான ஊரடங்கு அனுமதி பத்திரத்தினையும் தயாரித்துக்கொண்டு வசித்து வந்துள்ளார்

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் விருதுகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது