இன்றைய ராசிபலன்6/4/2020

இன்றைய ராசிபலன்6/4/2020

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ராஜதந்திரத்தை உணர்வீர்கள்.. மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

துலாம்

துலாம்: இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார்.அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் மனக்கசப்பு உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.