இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்ற மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.