மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை 7 நாட்களுக்கு நடத்த தடை
மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த இன்றிலிருந்து 07 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில், மாவனல்லை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தை நடத்த இன்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.